*கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு !!!*

கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு கோவை சித்ரா பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது, அப்பொழுது ஸ்ரீதர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து மாணவியின் பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் அப்பொழுது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து அவரிடம் கேட்டு உள்ளனர். அப்பொழுது ஸ்ரீதர் என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இதே போல் செல்வபுரம் பொன்னை ராஜாபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார். இவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். கோவையைச் சேர்ந்த 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவரை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவர் தனது தந்தையிடம் கூறிய அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் தந்தை செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் வேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர்.