பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்
கூத்தாண்டவர் திருவிழா: உளுந்தூர்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. நாளை காலை தேரோட்டம், 15ம் தேதி விடையாத்தை, 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.