கோவை அருகே உள்ள வடவள்ளி, அபிராமி நகர், லட்சுமி நிவாசை சேர்ந்தவர் ரத்னசபாபதி -இவரது மகன் வித்யாதர் ( வயது 27) பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தாளவாடியில் உள்ள தோட்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் டாக்டர் ராமசாமி அவருக்கு போன் செய்தார் .வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க- வைர நகைகள், பணம் ரூ 5 லட்சத்து 50 ஆயிரம் மற்றும்சி.சி.டி.வி. கேமரா ஹார்ட் டிஸ்க், ஒரிஜினல் பாஸ்போர்ட் ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் கன்னையன் ,சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஸ் அதிபர் வீட்டில் தங்க -வைர நகைகள்- பணம் கொள்ளை…









