யானை தந்தம் விற்ற வேட்டை தடுப்பு காவலர் உள்பட 8 பேர் கைது..!

மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் சிலர் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்வதாக வனச்சரகர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பூங்கா அருகே கோத்தகிரியை சேர்ந்த பிரதேஷ் ( வயது 27) சிறுமுகை சின்னப்பாண்டி ( வயது 45) ஆகியோர் கண்ணேரி முக்குவைச் சேர்ந்த சுப்ரமணி (வயது 43) என்பவரிடம யானை தந்தத்தை விற்க முயன்றது தெரிய வந்தது .உடனே அவர்களை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் சோலூர் மட்டத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 26 )மனோஜ் (வயது 23 ) ராஜ்குமார் ( வயது 42) கரிக்கையூரை சேர்ந்த நஞ்சுண்டன் (வயது 36) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு யானை தந்தத்தை விளா முண்டி வனச்சரகத்தில் பணிபுரிந்த வேட்டை தடுப்பு காவலரான பவானிசாகர் சேர்ந்த மணிகண்டன்( வயது 27) என்பவர் தாம்பக்கரை பள்ளம் வனப்பகுதியில் நடந்து செல்லும் போது கீழே கிடந்து எடுத்து கொடுத்ததும் தெரிய வந்தது .தொடர்ந்து அவர்கள் 8 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் யானை தந்தம், மரக்கட்டையால் ஆன போலி தந்தம், கார் , இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது