லோன் வாங்கியவர்களுக்கு இப்படி ஒரு ஜாக்பட்டா… ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..!

ந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா என பொதுமக்களின் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நடைபெற்ற நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும் போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். ஆனால் தொடர்ந்து 4வது முறையாக இது 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வீடு, வாகன கடன் வட்டி விகிதங்களும் மாறாது.

ஆனால், இந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறு, ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கி கடனுக்கு இஎம்ஐ செலுத்துபவர்களின் சுமை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் குறித்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், அதே 6.5% வட்டி விகிதம் தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்…