கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், எம். ஜி. ஆர். காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து( வயது 60)டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் பாக்கியம் என்ற பெண்ணை திருமணம் செய்யாமல் கணவன்- மனைவியாக வாழ்க்கை நடத்தி வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் முன் மின் ஒயர் அறுந்து கார் மீது விழுந்தது. இதனால் கார் தீப் பிடித்து எரிந்தது . இந்த சத்தம் கேட்டு மாரிமுத்து தண்ணீர் ஊற்றி அணைக்கச் சென்றார் .அப்போது அவரை மின்சாரம் தாக்கி அதே இடத்தில் இறந்தார் .இதை பார்த்த பாக்கியம் உதவி செய்ய முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
மின் ஒயர் அறுந்து விழுந்து கார் தீ பிடித்தது… டிரைவர் பரிதாப பலி – பெண் படுகாயம்..









