கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சேத்துமடை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்.ஜெயச்சந்திரன் இவரது மனைவி மகாதேவி ( வயது 38) இவர் நரிக்கல் பதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகையை சரிபார்த்தார் .அதில் 2 பவுன் தங்க நகை, ரூ.12 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவராஜ் மனைவி பாப்பாத்தி (வயது 32) என்பவர் ஆளில்லாத நேரத்தில் மகாதேவியின் வீட்டுக்குள் புகுந்து நகை-பணம் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர் நகை- பணம் மீட்கப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை,பணம் திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது..!








