சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கம் உள்ள மருதங்குடியை சேர்ந்தவர் டேவிட் (வயது 34) இவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சந்தன கருப்பு ( வயது 34 )இவர்கள் கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு காளான் கடையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடையில் இருந்த போது அந்த வழியாக சென்ற சிறுமிகளை பார்த்து ஆபாச சைகை காட்டியுள்ளனர் ..இது பற்றி அந்த சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமிகளி ன் பெற்றோர்களும்,அந்த பகுதியைசேர்ந்த பொதுமக்களும் திரண்டனர்.அவர்கள் 2 பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.அப்போது சந்தன கறுப்பு தப்பி ஓடிவிட்டார்.டேவிட்டை கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த டேவிட் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய சந்தனகறுப்பை போலீசார் மடக்கி பிடித்தனர் .இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட் |சந்தன கறுப்பு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்..இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
சிறுமிகளிடம் ஆபாச சைகை காட்டிய 2 பேருக்கு தர்ம அடி.!!








