கோவை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கமுள்ள அயோத்தி பட்டியை சேர்ந்தவர் போஸ் (வயது 65 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார் .களைப்பாக இருந்ததால் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிவிட்டார்.அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த 1,200 ரூபாயை ஒரு ஆசாமி நைசாக திருடினார்.உடனே கண் விழித்த போஸ் அந்த ஆசாமியை பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார் .போலீசார் அவரை கைது செய்தனர்.. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை, தளிரோட்டை சேர்ந்த ஜெயக்குமார் ( வயது 50) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ௹1, 200 பறிமுதல் செய்யப்பட்டது. இவர் கார் டிரைவர் வேலை செய்து வந்தார்.இவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவை பஸ் நிலையத்தில் படுத்து தூங்கியவரிடம் பணம் திருடிய கார் டிரைவராய் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!
