கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ரங்கசமுத்திரம் வால்பாறை மெயின் ரோட்டை சேர்ந்தவர் திருஞான சண்முகம் (வயது 48) சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார் .இவர் நேற்று திவான்ஷா புதூர் நடுகானி அம்மன் கோவில் அருகே சாமி கும்பிடுவதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 4 பேர் இவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினார்கள் .இதில் இவர் படுகாயம் அடைந்தார் .பிறகு இவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இவர் படுகாயத்துடன் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரது மனைவி தனலட்சுமி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கேரள மாநிலம் நெம்மாராவை சேர்ந்த பிரதீஸ் (வயது 21) சிஜி ( வயது 25 )ராஜேஷ் ( வயது 30 )தினேஷ் (வயது25) ஆகியோரைகைது செய்தனர் .இவர்கள் பொள்ளாச்சி பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர் .4 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாரி டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயற்சி- 4 பேர் கைது..!








