கோவை ராமநாதபுரம், சக்தி நகர் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ராகப்பிரியா (வயது 23) பேர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார்.அப்போது அவரது கணவர் வினோத் அவரது நண்பர்களான பீஷ்மர் உட்பட 3 பேருடன் சேர்ந்து அவரது வீட்டில் வைத்து மது அருந்தினார்.மனைவி ராகபிரியா மாலையில் வீடு திரும்பினார். பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 3 பவுன் தங்கச் செயினை காணவில்லை. இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவரது கணவர் வினோத்துடன் சேர்ந்து மது அருந்திய நாமக்கல் மாவட்டம் ,செல்வம்பட்டி வ. உ. சி. நகரை சேர்ந்த பீஷ்மர் ( வயது 32 ) கைது செய்யப்பட்டார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார் . இவரிடமிருந்து 3 பவுன் தங்க செயின் மீட்கப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வீட்டில் புகுந்து நகை திருட்டு- கணவருடன் சேர்ந்து மது அருந்திய நண்பர் கைவரிசை..!








