கோவையில் மனநல சேவை-முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

கோவை: மன உறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு என்னும் மனநல சேவையை மருத்துவ மாணவர்களுக்காக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம்
மன அளவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதனை முதல்அமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த சேவை மூலம் பாதிக்கப்படும் மாணவர்களை ஆசிரியர்கள் பேராசிரியர் மூலம் கண்டறியப்பட்டு முதலில் 14416 என்ற கட்டணமில்லா அலைபேசி மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இந்த ஆலோசனைகளை மனநல மருத்துவர் அடங்கிய குழுவினர் மனநலம் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்குவார்கள். அலைபேசி மூலம் மாணவர்களின் மனநிலை மாறவில்லை என்றால் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கப்படும். இந்தத் திட்டத்தால் மாணவர்களை மன நிலையை ஒழுங்குபடுத்த முடியும் என டாக்டர் தெரிவித்தனர். கோவையில் நடந்த மனநல சேவை தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா மற்றும் ஆஸ்பத்திரி டாக்டர்கள், மனநல டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.