அட காரணம் இதுதானா!!தேங்கும் ரஷ்யா கச்சா எண்ணெய்… அடிக்க போகுது இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்…!

மாஸ்கோ: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிக்கும் சில நாடுகள் தடைவித்துத்துள்ளதால், இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இரு நாடுகளையும் போரை கைவிடும் படி உலக நாடுகள் கேட்டுக்கொண்டன. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தும், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாமல், தொடர்ந்து போர் நடந்து வருகிறது..

இதனால் ரஷ்யா மீது பொருளாதார தடைவிதித்துள்ளன அமெரிக்கா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள். இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ரஷ்யா எண்ணெய் வளம் மிக்க நாடு. 2020ம் ஆண்டில் உலகின் மொத்த எண்ணெய் தேவையில் ரஷ்யா 12% உற்பத்தி செய்து கொடுத்தது. அதுபோல் 16% இயற்கை எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்தது. ரஷ்யா தினமும் அமெரிக்காவுக்கு 700000 பேரல் எண்ணெய்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வந்தது ரஷ்யா. அதேபோல் ஐரோப்பிய நாடுகளுக்கு தினமும் 4.5 மில்லியன் எண்ணெய் பேரல்களை ரஷ்யா அனுப்பி வருகிறது.

உக்ரைன் மீது போர் நடந்து வருவதால், ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இந்த நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யமுடியாத நிலையில், புது ஏற்றுமதியாளர்களை ரஷ்யா இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இன்னும் அதிகமாக கொடுக்க முன்வந்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள எரிசக்தி துறையில் இந்தியா சார்பில் 1600 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா அனுமதி கொடுத்திருக்கிறது. இதை ரஷ்ய துணை பிரதமர், இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரியிடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எண்ணெய், எரிவாயு துறைகளில் இந்தியா ரஷ்யா உறவை வலுப்படுத்தும் விதமாக தொடர்ந்து ரஷ்யாவிடம் பேசி வருகிறார் மத்திய அமைச்சர்.

இதையடுத்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு கொடுக்க ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ”ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொடுக்க முன்வந்துள்ளது. எப்படி கொண்டுவருவது, ரஷ்யாவுக்கு கொடுக்க வேண்டிய பணம் இதெல்லாம் குறித்தும் அரசுடன் ஆலோசிக்கவுள்ளோம். அதன்பிறகே முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்தகத்தில் ஈடுபட்டுவருகிறது. இதனால் இந்தியா மீது இந்த நாடுகள் அதிருப்தியில் இருக்கின்றன. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதம் ‘ஒருதலைபட்சமாக போடப்படும் பொருளாதாரத் தடைகளை ஏற்கமுடியாது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.