கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிறுத்தினால்… கடும் நடவடிக்கை- பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!!

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது .

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநர் கருப்பசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்து தண்டிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்துமாறும் மாவட்ட கல்வி அதிகாரிகளை மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநர் கருப்பசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.