அமைச்சர் வைத்த பிரியாணி விருந்து… கதவை உடைத்து கொண்டு உள்புகுந்த திமுகவினரால் வெடித்தது பிரச்சனை-மதுரையில் பரபரப்பு..!!

முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளான தியாகராஜன் பேசும் போது அதனை வெளிப்படுத்தி கொந்தளித்தார்.

அவர் தெரிவித்ததாவது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை மீறி ஒரு சிலர் நன்றி மறந்து செயல்படுகிறார்கள் ஸ்டாலினுக்காக நடத்தப்பட்ட இந்த விருந்திலும் அவர்கள் புறக்கணித்து யாரும் வரக்கூடாது என்று மிரட்டல் விடுத்தது வேதனையை தருகிறது. சிறிய மனிதராக நடந்து கொள்ளக் கூடாது. சுயமரியாதைக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

நான் பொருளாதாரத்தில் சுதந்திரத்துடன் இருக்கின்றேன். ஆனால் சிலருக்கு பொருளாதாரத்தை விட பேராசை படுகிறார்கள். நான் யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை. நான் பெரிய மனிதன் எனக்காக போஸ்டர் ஒட்ட சொல்ல மாட்டேன் பெயரை போட சொல்ல மாட்டேன் என்ன நடக்குமோ அது விரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.

திறமையற்றவர்களை திறமையானவர்களாக தலைமைக்கு காட்ட இயலாது. சிலர் கட்சி பொறுப்பு தருவதாக தெரிவித்து என் ஆதரவாளர்களை தொலைபேசியில் அழைத்துள்ளார்கள். அவர்கள் மறுத்துவிட்டனர். செய்நன்றி மறந்தவர்களுக்கு ஒரு நாள் வீழ்ச்சி வரும் என்று உரையாற்றி இருந்தார்.

அமைச்சரின் இந்த பேச்சு தொடர்பாகவும், அதன் பின்னணி தொடர்பாகவும் நிர்வாகிகள் தெரிவித்ததாவது நகரச் செயலாளர் தேர்தலில் தளபதிக்கு எதிராக தியாகராஜன் செயல்பட்டார். அமைச்சர் மூர்த்தி உட்பட மூத்த அமைச்சர்கள் பலரின் ஆதரவில் தளபதி வெற்றி பெற்றார். இதில் தியாகராஜனுக்கு பின்னடைவு உண்டானது.

இந்த நிலையில் அவர் வழங்கிய விருந்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்து தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக காண்பித்ததால் தியாகராஜன் விரக்தியாக பேசியுள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தளபதியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கும்போது, விருந்துக்கு அமைச்சர் மூர்த்தி, நகர செயலாளர் தியாகராஜன் அழைக்கவில்லை. கட்சி தலைமைக்கும் தெரிவித்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். நகர செயலாளர் தேர்தல் சமயத்தில் புகைந்த கோஷ்டி பூசல் அமைச்சர் பிரியாணி விரைவில் வெளிப்படையாக வெடித்திருக்கிறது. இது மதுரை மாவட்ட திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது