கோவை மாநகரில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.!!

கோவை மாநகரில் 20 சட்டம் – ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மாநகருக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று 9 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-கோவை ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல நாகை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிராங்கிளின் கடைவீதி காவல் நிலைய விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், வடவள்ளி காவல் நிலைய கூடுதல் பொறுப்பு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சரோஜா கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சேகர் கோவை ராமநாதபுரம்சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய செந்தில்குமார் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருச்சி மாநகர இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வினித் குமார் துடியலூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும்,காட்டூர் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பத்திரகாளி ராமநாதபுரம் காவல் நிலைய விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று இரவு வெளியிட்டார்.