கோவையில் 9 மாத கர்ப்பிணி பேராசிரியை திடீர் மரணம்-போலீசார் விசாரணை..!

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி மைதிலி ( வயது 35) பி.எச்.டி .பட்டம் பெற்றவர். இவர் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது . தற்போது மைதிலி 9 மாத கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கால் டாக்சியில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.வழியில் அவருக்கு பனி குடம் உடைந்தது.மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக கூறினார்கள் . இது குறித்து அவரது தந்தை ரங்கசாமி பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.