திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும் அதிக பாரத்துடன் செம்மன் லாரிகள் இயக்குவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார்.
இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த 9 கேரளா மாநில லாரிகளை பொதுமக்கள் தடுத்து சிறை பிடித்தனர்.
பின்னர் இது குறித்து தாராபுரம் வட்டாட்சியருக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்
விதிமுறைக்கு புறம்பாக செம்மண் லோடு ஏற்றி வந்த 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாராபுரம் நகர வருவாய் ஆய்வாளர் சரவணன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அதிகாரிகள். ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.