பட்டறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நகை தொழிலாளிகள் 8 பேர் கைது..!

கோவை கருப்பகவுண்டர் வீதியில் உள்ள ” டை” பட்டறையில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக வெரைட்டி ஹால் ரோடு போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கோபால் ( 67 )அப்பன் சாமி (59) கோவிந்தன் ( 40 ) முருகன் ( 41 ) ராஜேஷ் ( 41 )மகேஸ்வரன் ( 49 ) கணேசன் (41) சந்திர பாண்டி ( 49)ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .இவர்கள் அனைவரும் நகை பட்டறை தொழிலாளிகள் ஆவார்கள்.