போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் போதை ஏற்றக் கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சரவணம்பட்டி to துடியலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன்குமார் மற்றும் அங்கித்குமார்* ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7,00,000/- மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் -1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்படி சிறப்பாக செயல்பட்டு கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
Leave a Reply