மாமல்லபுரத்தில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம் : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!!

சென்னை அருகே மாமல்லபுரத்தில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதியில் முதல் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

இந்நிலையில்,மாமல்லாபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும்,செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான லோகோவை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான லோகோவை தமிழக அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து வடிவமைத்துள்ளன. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் இவ்விழாவில் அமைச்சர்கள்,அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.