போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி நூதன முறையில் பண மோசடி.. கோவை இளைஞர்கள் 4 பேர் கைது..!

கோவை: கரூா் பக்கம் உள்ள தாந்தோணிமலையைச் சோந்த வேணுகோபால். இவரது மகன் சுரேந்தா் (வயது 28) இவரது செல்போனுக்கு கடந்த 13ஆம் தேதிஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர’தான் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருந்து இருந்து சப் இன்ஸ்பெக்டர்முருகன் பேசுவதாகவும், தங்களது கைப்பேசி கட்செவி அஞ்சல் எண் ஆபாச படம் எடுக்கும் கட்செவி அஞ்சல் குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, உங்களை விசாரிக்க வேண்டியுள்ளதால் சென்னை தாம்பரம் காவல் நிலையத்துக்கு வரவேண்டும். வரவில்லையென்றால் கரூா் போலீசை வைத்து கைது செய்வேன்’ எனக் கூறியுள்ளாா். பின்னா், சுரேந்தரிடம் இதற்கான அபராதத் தொகை ரூ. 5ஆயிரத்தை கட்டிவிடு, இல்லையேல் வீட்டுக்கு வந்து போலீசார் விசாரிப்பாா்கள் எனக்கூறியுள்ளாா். இதனால் பயந்துபோன சுரேந்தா், செல்போனில் பேசிய நபரின் எண்ணுக்கு இணையவழியில் ரூ.5 ஆயிரம் அனுப்பியுள்ளாா். பிறகு, சுரேந்தா் செல்போனில் ட்ரூகாலரில் பாா்த்தபோது, அந்த எண், சித்து என்ற பெயரில் பதிவாய் இருந்தது.இதனால், சந்தேகத்தின்பேரில் சுரேந்தா் புதன்கிழமை காலை கரூா் மாவட்ட சைபா் கிரைம் போலீசில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுரேந்தரிடம் மோசடி செய்தவா் கோவையில் இருப்பது தெரியவந்தது. பிறகு போலீசார் கோவைச் சென்று, கோவை வடவள்ளியைச் சோந்த பாலமுருகன் மகன் கவுதம் (வயது 19)) என்பரை கைது செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சோந்த குமாா் மகன் மாதவன் (வயது 19) சாமுவேல் மகன் ஜான்பீட்டா் (வயது19)சிவா மகன் சந்தன சுவர்ணகுமாா் (வயது 19) ஆகியோரையும் கைது செய்து கரூருக்கு அழைத்து சென்றனா். இதையடுத்து கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை இரவு 4 பேரையும் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞா்கள் 4 பேரும் கோவை, ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் இதேபோன்று குற்றங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.