மடிப்பாக்கத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது:303 கிலோ கஞ்சா, 7 செல்போன்கள், 3 அரிவாள்கள், 2 கார்கள் பறிமுதல்..!

சென்னை நகரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தி வரப்படுவது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோ ர் கடுமையான உத்தரவின் பேரில் புதியதாக பொறுப்பேற்ற புனித தோமையர் மலை துணை ஆணையர் டாக்டர் சுதாகர் நேரடி மேற்பார்வையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் போலீசார் அதிரடி ஆக்க்ஷனில் ஈடுபட்டனர்.

இரண்டு கார்களில் வேகமாக வந்ததை மடக்கி பிடித்து சோதனை போட்டனர். காரில் அதிக போதை ஏற்றும் 303 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றையும் பறிமுதல் செய்தனர். 7 செல்போன்களையும் , 3 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி வந்த 1. கிஷோர் என்கிற கிஷோர் குமார் என்கிற ரஞ்சன் கிஷோர் குமார் வயது 30 தகப்பனார் பெயர் ராஜன் செந்தமிழ் நகர் 2 வ து குறுக்கு தெரு செங்குன்றம் சென்னை 2. அசோக் என்கிற ஒத்தக்கண் அசோக் வயது 29. தகப்பனார் பெயர் நாவலர் நெடுஞ்செழியன் தெரு செங்கல்பட்டு மாவட்டம் 3. உதயகுமார் வயது 23. தகப்பனார் பெயர் மணிவண்ணன் யமுனா தெரு திலகவதி நகர் இரும்புலியூர் கிழக்கு தாம்பரம் ஆகிய 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட கிஷோர் என்கிற கிஷோர் குமார் என்கிற ரஞ்சன் கிஷோர் குமார் என்பவன் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவாக இருந்தவர். இவன் மீது 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி . அசோக் என்கிற ஒத்த கண் அசோக் மீது 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி உதயகுமார் மீது 13 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பீர்க்கங்கரனை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி இவர்கள் மூன்று பேரும் பலமான விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை சமயோசிதமாக செயல்பட்டு மடக்கி பிடித்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்..