பெயிண்டரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை.!!

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் பெயிண்டர். இவரது அண்ணன் விக்னேஷ். இவர்கள் இருவரும் மீதும் குற்ற வழக்கு இருந்தன .இதனால் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்தனர் .இந்த நிலையில் விக்னேஷிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்பவர் எப்போது மீண்டும் சிறைக்குச் செல்ல போகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் ஜோசை தாக்கினார் .இது பற்றி ஜோஸ் தனது நண்பர்கள் ஜீனத் குமார் ,செந்தில்குமார்,, சூரிய பிரகாஷ், ஆகியோரிடம் கூறினார். உடனே அவர்கள் விக்னேசை சந்தித்து கண்டித்துள்ளனர். இதனால் ஜோஸ் மற்றும் அவரது நண்பர்களை விக்னேஷ் மிரட்டி உள்ளார் .இந்த நிலையில் அவர்கள் விக்னேசை கொலை செய்ய திட்டமிட்டனர். இதனால் அவர்கள் சீனிவாசனிடம் உனது அண்ணன் விக்னேஷ் தங்கியிருக்கும் வீட்டை காண்பிக்கும்படி கேட்டுள்ளனர்.. அப்போது அவர்கள் விக்னேசை கொலை செய்ய திட்டமிடுவது தெரிய வந்ததால் வீட்டை காட்ட சீனிவாசன் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வெள்ளக் கிணறு கணபதி ரோடு பகுதிக்கு சீனிவாசனை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் சீனிவாசனை கத்தியால் குத்தி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீனத் குமார், செந்தில்குமார், சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனார் .இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ,தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.