கபடி வீரரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!

கோவை : கோவை புலிகுளம் அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 23) இவர் கபடி விளையாட்டு வீரர் .இந்த நிலையில் கடந்த 16- 1- 22 அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன்குளம் நியூ ஹவுசிங் யூனிட்டில் கபடி போட்டி நடந்தது இதில் அந்த பகுதியில் சேர்ந்த நவீன் குமார் தனது அணியில் விளையாட கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை அழைத்து வந்துள்ளார்.இவர் பங்கேற்று விளையாடிய அணி வெற்றி பெற்றது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த டொக்கி என்கிற விஜயகுமார் (வயது 21) கள்ளி என்கிற கண்ணன் ( வயது 22) ஜப்பான் என்கிற ஹரிகரன் (வயது 21) ஆகிய 3பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .மேலும் வெளியூரை சேர்ந்த நபரை அழைத்து வந்து கபடி போட்டியில் வெற்றி பெற்றதாக கூறி நவீன் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் .அன்றைய தினம் இரவு நவீன் குமார் அவரது நண்பர் லோகேஸ்வரன் ஆகியோர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது டொக்கி என்கிற விஜயகுமார் கள்ளி என்கிற கண்ணன் ஜப்பான் என்கிற ஹரிகரன் ஆகிய 3 பேரும் அவர்கள் இருவரையும் வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .பின்னர் திடீரென்று 3 பேரும் சேர்ந்து நவீன் குமாரின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தினர் .மேலும் அதனை தடுத்த லோகேஸ்வரனையும் தாக்கினார்கள் . இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் ஓடி வந்தனர் .அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த நவீன் குமார், லோகேஸ்வரன் ஆகியோரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் நவீன் குமார் இறந்தார் .இது குறித்து அப்போது ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகேசன் 3 பேரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலு கபடி வீரர் நவீன் குமாரை கொலை செய்த டொக்கி என்கிற விஜயகுமார்,கள்ளி என்கிற கண்ணன், ஜப்பான் என்கிற ஹரிஹரன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 3500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.