கோவை கல்லூரி முன் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது..!

கோவை மதுக்கரை அருகே உள்ள நவக்கரையில் ஒரு தனியார் கல்லூரி முன் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கே. ஜி. சாவடி போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரிடம் சோதனை செய்தார். அவர்களிடம் 500 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜுன் ( வயது 21) எர்ணாகுளம் அர்ஜுன் ( வயது 21)திருச்சூர் காடன் கோடு அக்ஜய் (வயது 20) என்பது தெரிய வந்தது. .இவர்கள் கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவை அருகே உள்ள கல்லூரி முன் நின்று மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது .3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.