கோவையில் கடந்த 4 மாதத்தில் போதைப் பொருள் விற்ற 206 பேர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் தீவிர கஞ்சா வேட்டை நடந்தது நேற்று. ஒரே நாளில் 10 கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30 -ந் தேதி வரை 4 மாதத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 206 பேர் கைது செய்யப்பட்டனர். 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 428 கிலோ 851 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்..