காரில் சென்றவரை வழிமறித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த 2 திருநங்கைகள்-கோவையில் பரபரப்பு..!

கோவை :அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் மீது வழக்கு. ரத்னபுரி காவல்துறையினர் இருவரை கைது செய்து சிறையிலடைப்பு..

கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தனது தனிப்பட்ட பணியை முடித்துவிட்டு இரவு “11 மணியளவில் வீடு திரும்பும் பொழுது காந்திபுரம் 100 அடி சாலை எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள ஏழாவது வீதியில் பயணித்திருக்கின்றார். அப்போது அங்கு இருந்த வேகத்தடை முன்பாக மெதுவாக வாகனம் ஏறி இறங்கிய பொழுது அருகாமையில் இருந்த இரண்டு அடையாளம் தெரியாத திருநங்கைகள் காரை மறித்து பணம் தரும்படி கேட்டிருக்கின்றனர். பணம் தர வற்புறுத்தி தகாத வார்த்தைகளால் சொல்லி மிரட்டி திட்டியதாகவும் கூறப்படுகின்றது பிரதாப் சந்திரன் பாக்கெட்டில் இருந்த பணத்தையும் பறித்து சென்றிருப்பதாக தெரிகின்றது.

இந்த நிலையில் மன உளைச்சல் ஏற்பட்ட பிரதாப் சந்திரன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் வனிஷா மற்றும் ரம்யா என்ற இரண்டு நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.