பள்ளிக்கூடம் அருகே பீடி, சிகரெட் விற்பனை – 2 வியாபாரிகள் கைது..!

கோவை உக்கடம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேந்திரன் ( வயது 50) இவர் அங்குள்ள வின்சென்ட் ரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அங்கு இவர் தடை செய்யப்பட்ட பீடி – சிகரெட்டுகளை விற்பனை செய்தார்.இதை அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த உக்கடம் போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பீடி – சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல பி. கே .செட்டி வீதியில் ஒரு பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடையில் பீடி – சிகரெட் விற்றதாக குனியமுத்தூர் வெங்கடசாமி நாயுடு நகரை சேர்ந்த முகமது ரியாஸ் ( வயது 32) கைது செய்யப்பட்டார். பீடி -சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.