கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை நகரில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனங்கள் ஒட்டி சென்று விபத்து ஏற்படுவதை தடுக்க இரவு 8மணி முதல் 11 மணி வரை 2 தனிப்படையினர் கோவை மாநகர் முழுவதும் தீவிர சோதனை நடத்துவார்கள் .தினமும் குறைந்தபட்சம் 15க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்வார்கள் .மேம்பால பணிகள் காரணமாக அவினாசி ரோட்டில் கேமராக்கள் முழுமையாக செயல்படவில்லை. அங்கிருந்த கேமராக்கள் எடுக்கப்பட்டு வேறு பகுதிகளில் பொருத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 2 தனிப்படை போலீசார் ..!
