இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்-3 பேர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் போலீசாருடன் சரவணம்பட்டி- துடியலூர் ரோட்டில் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்திசோதனை செய்தனர். அதில் 2,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக அதை கடத்தி வந்த 3பேரும் கைது செய்யப்பட்டனர் .விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (வயது 21 )கவின்ராஜ் ( வயது 21) தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜசாந்த் ( வயது 23) என்பது தெரிய வந்தது.கஞ்சாவும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.