17,000 மெகாவாட் மின் தட்டுப்பாடு – மக்கள் கடும் அவதி.!!

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தான் கோடை காலம் துவங்குகிறது. ஆனாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பு, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.தினமும் சராசரியாக 15,000 மெகாவாட் என இருந்த மின் நுகர்வு, ஜனவரி 31ம் தேதி 17,129 மெகாவாட்டாக அதிகரித்தது.ஜனவரியில் மின் நுகர்வு 17,000 மெகாவாட்டை தாண்டுவது இதுவே முதல்முறை.
இதனால் பல இடங்களில் இரவு, 9:00 மணிக்கு மேல் மின் சாதனங்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது.இரவு நேர பணியில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பதால், பழுதை சரிசெய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இரவு பணிக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்குமாறு மின் வாரியத்திற்கு, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.’ஒரு பிரிவு அலுவலகத்தில், உதவி பொறியாளர், கள பிரிவு ஊழியர் என, 20 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் பெரும்பாலும் பாதி பேர் கூட இல்லை. இரவு பணியில் இன்னும் குறைவு.

இதனால் பழுதை சரிசெய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரவு பணிக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்’ என சங்க நிர்வாகிகள் கூறினர்.மின்னகத்தில் புகார் மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் உள்ளது. மின்சாரம் தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். புகாரை பதிவு செய்து புகார்தாரரின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அதை வைத்து மேல் நடவடிக்கை விபரங்களை தெரிந்து கொள்ளலாம். தற்போது எஸ்.எம்.எஸ்., வருவதில்லை என்று கூறப்படுகிறது..