அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்
1) அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்..
2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்..
3) அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
4) அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
5) அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்.
6) அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது..
7) அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
8) மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல் பட்ட அதிமுக அரசின் வரலாற்று வெற்றிகளும்.
9) அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்…
10) விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்.
11) சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
12) மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியிறுத்தல்.
13) இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
14) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்.
15) நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
16) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.
Leave a Reply