வீட்டில் பதுக்கி வைத்திருந்த 120 கிலோ குட்கா பறிமுதல்- கோவை வியாபாரி கைது..!

கோவை துடியலூரில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது, இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் அங்கு நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 119 .680 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 1 லட்சம் இருக்கும். இதையொட்டி அதை பதுக்கி வைத்திருந்ததாக கருமத்தம்பட்டி செந்தில் நகரை சேர்ந்த மளிகை வியாபாரி ஜெகன் அந்தோணி ராஜேஷ் (வயது 39) கைது செய்யப்பட்டார்.விசாரணையில் இவர் வாகராம்பாளையத்தைச் சேர்ந்த பொன்மணி என்பவரிடம் இதை வாங்கியது தெரியவந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.