11 ம் வகுப்பு மாணவி தற்கொலை- கடந்த 2 வாரங்களில் தொடரும் 4வது சோக சம்பவம்..

தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த 17 வயது 11 ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிறுமி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக, தமிழகத்தில் ஜூலை 13ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்பு படிக்கும் 3 சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது.