என்ன கொடுமை இது… எட்டாம் வகுப்பு மாணவனுடன் எதிர்வீட்டு 28 வயது திருமணமான பெண் தப்பி ஓட்டம் ..!!

எட்டாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனுடன் காதல் கொண்ட எதிர்வீட்டு 28 வயது திருமணமான பெண், கணவனை விட்டு அந்த மாணவனை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் .

அந்த மாணவனின் பெற்றோரும் உறவினரும் தேடி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கும் குட்மென் பேட்டையைச் சேர்ந்தவர் ஷப்னா. 28 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். ஷப்னாவின் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு எதிர் வீட்டில் இருக்கும் எட்டாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன் சானுவுடன் சப்னாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

சிறுவனுடன் ஷப்னா கள்ள உறவு வைத்திருந்திருக்கிறார். இந்த உறவு நெருக்கமாகிய நிலையில் கடந்த 19ஆம் தேதி திடீரென்று சானுவை அழைத்துக் கொண்டு தனது இரண்டு குழந்தைகளுடன் ஷப்னா வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

ஷப்னா குழந்தைகள் அழைத்துக் கொண்டு போய் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவே அவரது குடும்பத்தினர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்வீட்டு மாணவன் சானுவும் காணாமல் போனதால் ஊரைவிட்டு இவர்கள் ஓடி இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. இல்லை பணத்துக்காக மாணவனை கடத்திச் சென்றாரா என்றும், தொலைபேசி வாயிலாக பணம் கேட்டு மிரட்டுவாரா என்றும் எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இதுவரைக்கும் இல்லை.

ஷப்னா எங்கே சென்றார் சானு எங்கே அழைத்துச் சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷப்னாவும், மாணவன் சானுவும் காணாமல் போனதிலிருந்து அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது . இருவரது போன் கால், செல்போன் சிக்னல் அடிப்படையில் விசாரணை நடந்து வருகின்றன.