திண்டுக்கல் மாவட்டம் ,பழனியில் உள்ள வ .உ .சி. வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 67 )இவர் தனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.மனைவியுடன்மருத்துவமனையில்தங்கி இருந்தார் அப்போது அவரது பையில் மனைவியின் 10 பவுன் நகைகள் 2 வெள்ளி மெட்டி ஆகியவற்றை கழட்டி வைத்திருந்தார்.அந்த நகைகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சுப்பிரமணியம் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
கோவை மருத்துவமனையில் நோயாளியிடம் 10 பவுன் நகை திருட்டு..!
