தமிழகத்தில் புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள்- அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் ரூ.166.50 கோடியில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மணப்பாறை, செஞ்சி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிக்க 11 மையங்கள் நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.