இன்ஜினியர்-கல்லூரிமாணவி தற்கொலை. கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ( பேஸ் 1) பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பழனிவேல்( வயது 26) பி.இ. படித்து முடித்துவிட்டு அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராகவேலை பார்த்து வந்தார்,இவர் வெளிநாட்டில் போய் வேலை பார்க்க விரும்பினார் கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு செல்ல முடியவில்லை’இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த பழனிவேல் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதே போல பீளமேடு ,மறைமலை அடிகளார் நகரை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவரது மகள் பூர்ணிமா ( வயது 17)ஆவராம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. ஏ. ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் இவர் விடுமுறையாததால் பகுதி நேர வேலைக்கு செல்ல விரும்பினார் அதற்கு பெற்றோர்கள் . இதனால் வெறுப்படைந்த பூர்ணிமா நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் மீனாட்சி பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
இன்ஜினியர்-கல்லூரி மாணவி தற்கொலை.









