கோவை மே 28 கோவை கெம்பட்டி காலனி, விநாயக கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரவேல் .இவரது மகன் பொன்ராஜ் ( வயது 30 )இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபிஎன்பவருக்கு ரூ. 14, ஆயிரம் கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அபி செல்போன் மூலம் பொன்ராஜை ஆர். எஸ் .புரம், லாலி ரோட்டில் உள்ள ஒரு மது கடைக்கு வருமாறும் , அங்கு வைத்து இது தொடர்பாக பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.இதை நம்பிய பொன்ராஜ் டாஸ்மாக் கடைக்குசென்றார். அப்போது அபியும்,அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து பொன்ராஜைசரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினார்கள் .இதில் பொன்ராஜ் க்கு பலத்த காயம் ஏற்பட்டது . அவர்சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொன்ராஜ் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து அபி உட்பட 3 பேரை தேடி வருகிறார்.
டாஸ்மாக் கடை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து .
