கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை லோயர் டிவிஷன் பகுதியில் உள்ள அக்கா மலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் வினிதா ( வயது23). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவி ( வயது 49) இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி குடிபோதையில் சந்திரன் வீட்டுக்கு சென்றார். கதவைத் தட்டினார். பின்னர் உள்ளே புகுந்து அங்கிருந்த சந்திரன் மகள் வினிதாவின் கைகளைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார் . இது குறித்து வினிதா வால்பாறை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மானபங்க முயற்சி, உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.