சமீப காலமாக சென்னை மாநகரமே போதை தாதாக்களின் கைப்பிடியில் சிக்கி சீர ழிந்து வரும் நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார் பிடிபட்டவர்களிடம் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்து இருந்தார் அதன் பேரில் மதுரவாயல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரவாயில் ஆண்டாள் நகர் பகுதியைச் சேர்ந்தவன் ஹரி பிரசாத் வயது 22 இவன் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியார் கல்லூரியில் பார்மசி நான்காம் ஆண்டு படித்து வருகிறான் இவன் குஜராத் மாநிலம் சூரத் நகர் பகுதியில் இருந்து ஆன்லைன் மூலம் அதிக போதை ஏற்றும் மாத்திரைகளையும் அதிக கிக் ஏற்றும் ஊசிகளையும் சென்னைக்கு வரவழைத்து தான் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு அதிக லாபத்துடன் விற்பனை செய்து வந்துள்ளான் இந்நிலையில் இவனது நண்பரான ஆட்டோ டிரைவர் மதுரவாயில் ஆலப்பாக்கம் கணபதி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு தலைவலி வந்ததாகவும் ஹரிபிரசாத்திடம் கூறியுள்ளார் இதை எடுத்து தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி ஆட்டோ டிரைவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று மருந்தை ஊசி ஏற்றி உடம்பில் செலுத்தியுள்ளான் ஆட்டோ டிரைவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்இந்நிலையில் போதை மாத்திரை போதை ஊசி அதிக அளவில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதை கும்பலின் தாதா ஹரி பிரசாத் ஈடுபடுவதாக அவனிடத்திலிருந்து 200 போதை மாத்திரைகளையும் எட்டு போதை ஊசிகளையும் கைப்பற்றினர் ஒரு போதை மாத்திரை ரூ 300 க்கு விற்பனை செய்வதாகவும் போதை ஊசி ரூ.500 க்கு விற்பனை செய்வதாக போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
குஜராத்தில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் அதிகம் ஏற்றும் போதை ஊசிகள் சென்னையில் விற்பனை: கல்லூரி மாணவன் கைது…
