வாவ்! சூப்பர்!! கோவையில் பஸ், வேன் ஓட்டி சாதனை படைக்கும் பெண் போலீஸ் மற்றும் பெண் ஓட்டுநர்-போலீஸ் கமிஷனர் பாராட்டு..!

கோவை மாநகர ஆயுதப்படை, வாகன பிரிவில் முதல் நிலை பெண் போலீசாக பணியாற்றி வருபவர் செல்வராணி (வயது 31)ஆயுதப் படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 2009 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார்.இளம் வயதிலே வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டார்.ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு காவல்துறையில் உள்ள வேன், ஜீப் போலீஸ் பஸ் , வஜ்ரா வாகனம் .உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் இயக்கி வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர். 500 கிலோ மீட்டர் தூரம் 4 சக்கர வாகனத்தை நிறுத்தாமல் ஒட்டி செல்வேன் என்று கூறுகிறார்.

இதேபோல கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் சர்மிளா (வயது. 24) இவர் பார்மசி டிப்ளமோ படித்துள்ளார்.இந்த நிலையில், தந்தையின் ஓட்டுநர் தொழிலில் ஈர்க்கப்பட்டு தற்போது பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஆவதை லட்சியமாக கொண்டிருந்த சர்மிளா, ஓட்டுநர் உரிமம் பெற்று தற்போது பேருந்துகளை இயக்கி வருகிறார்.  காந்திபுரம் முதல் சோமனூர் வரைக்கும் செல்லும் தனியார் பேருந்தினை, சர்மிளா இயக்கி வருவது பெண்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.இவர்கள் இருவரையும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்..