எந்த கடவுளையும் வணங்குங்கள் ஆனால்… அமீர்கானின் கலச பூஜை, ஷாருக்கின் வைஷ்ணோதேவி வழிபாடு குறித்து பா.ஜ.க. அமைச்சர் கருத்து.!

மீர் கான் தனது புதிய அலுவலகத்தில் இந்து முறைப்படி பூஜை நடத்தியது, ஷாரூக் கான் வைஷ்னோ தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்ததை குறிப்பிட்டு, ஒருவர் எந்த கடவுளையும் வணங்க முடியும்.

ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்த வேண்டாம் என்று மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்துடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்னோ தேவி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை ஷாரூக்கான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். கடந்த வாரம் மற்றொரு பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது புதிய அலுவலகத்தில் கலாஷ் பூஜை நடத்தினார். அமீர் கான் தனது முன்னாள் மனைவியும் திரைப்பட தயாரிப்பாளருமான கிரண் ராவுடன் தனது அலுவலகத்தில் இந்து சடங்குகளின்படி பூஜையை நடத்தினார்.

அமீர் கானின் அலுவலக பூஜை படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. ஷாரூக்கான் கோயிலுக்கு சென்றதும், அமீர்கான் அலுவலகத்தில் இந்து முறைப்படி பூஜை நடத்தியதும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது: சமூகம் இப்போது அறிந்திருக்கிறது. அவர்கள் இப்போது இதை புரிந்து கொண்டால், அது நல்லது.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் நம்பிக்கையின்படி வணங்க உரிமை உண்டு. ஒருவர் எந்த கடவுளையும் வணங்க முடியும். ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்த வேண்டாம். அவ்வளவுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.