கோவை சாய்பாபா காலனி கருப்பண்ணன் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42) கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனக்கு திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆனந்தன் கடந்த 21-ந் தேதி சாய்பாபா காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அந்த நேரத்தில் துடியலூரில் இருந்து போத்தனூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வந்ததை பார்த்தார். அந்த பஸ் அருகே வந்ததும் திடீரென்று ஓடும் பஸ்சின் முன் பாய்ந்தார் . பஸ்சின் இடது முன் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.அவர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்யும் காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமண ஆகாத ஏக்கத்தில் ஓடும் பேருந்து முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை..









