மகளிர் உரிமை திட்டம்… 7 லட்சம் பேர் மேல் முறையீடு..!

தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை, அண்ணா பிறந்தநாளன்று  காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்,

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது.இதன்படி

 
தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இ-சேவை மையங்கள் மூலம் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.

விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தவறாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் தகுந்த ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 21 ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. அதன்படி தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது வரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது..