குளிக்கும் போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு.

கோவை மே 8 கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் புதூர், வி .எம் . கே. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் .இவரது மனைவி வாணிஸ்ரீ ( வயது 47) இவரது வீட்டில் மின்சார ஹீட்டரில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது தாயார் லட்சுமி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.