கோவை .ஜூன் 16 கோவை சிங்காநல்லூர், வரதராஜபுரம், கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி பத்மாவதி (வயது 48) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பத்மாவதி படுகாயம் அடைந்தார் .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றஇருசக்கர வாகனத்தை தேடி வருகிறார்கள்..
அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு.







