வீட்டில் இருந்த நகை, பணம் திருட்டு – பெண் கைது..!

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ,கணபதி கார்டனை சேர்ந்தவர் வின்பிரட் .இவரது மனைவி பிரியா ( வயது 47) இவர் துடியலூர் பக்கமுள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ,பாம்பே நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவரது உறவினர் வீட்டில் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், பணம் ரூ 30 ஆயிரம் ஆகியவற்றை திடீரென்று காணவில்லை. இதுகுறித்து பிரியா துடியலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து டாடாபாத் அழகப்ப செட்டியார் வீதியை சேர்ந்த ஸ்டாலின் மனைவி சாந்தி (வயது 55 )என்பவரை நேற்று கைது செய்தனர் . நகை பணம் மீட்கப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..