லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான சொத்துக்கு யார் வாரிசு..?

இந்தியத் திரையுலகின் குரலாக கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக ஒலித்து வந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் சில தனங்களுக்கு முன்பு காலமானார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர் லதா.இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அவர் சொந்தமாக வாங்கிய வீடுகள், நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்கள், சேர்த்து வைத்துள்ள தங்கம் என அதில் அடங்குமாம். மேலும், அவர் பாடிய பாடல்களுக்காக ஒரு வருடத்திற்கும் சுமார் 5 கோடிக்கும் அதிகமாக அவருக்கு ராயல்டி தொகை வருகிறதாம்.குடும்பத்தில் மூத்தவராக இருந்த லதா மங்கேஷ்கருக்கு ஆஷா போஸ்லே, மீனா கட்கர், உஷா மங்கேஷ்கர் என மூன்று தங்கைகளும், ஹிருதயநாத் மங்கேஷ்கர் என்ற தம்பியும் உள்ளார். லதாவுடன் பிறந்த இவர்களும் நன்றாகவே செட்டிலானவர்கள்தான். லதாவின் சொத்துக்கள் அனைத்தும் இவர்களுக்குத்தான் மாற்றப்படும் என்றும் ஒரு தகவல் இருக்கிறதாம். அதே சமயம், லதா அவருடைய தந்தையார் பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அந்தப் பெயரில் தன்னுடைய சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளதாம். இருப்பினும் இன்னும் சில நாட்களில் லதா மங்கேஷ்கரின் வழக்கறிஞர் சொத்துக்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.